கடும்போக்குவாதம் தொடர்பில் வகுப்புகளை நடத்திய மூவர் குளியாப்பிட்டி – கெகுனுகொல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரால் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் சஹ்ரான் ஹாஷிமின் மனைவியின் தந்தையும் அடங்குவதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
40, 52 மற்றும் 55 வயதான மூவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.