சாட்டில் இராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று ஆபிரிக்க நாடுகளின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
சாட் ஜனாதிபதி இத்ரீஸ் டெபியின் ( Idriss Déby) மரணத்தை அடுத்து அவரது மகன் தலைமையிலான இராணுவ சபை 18 மாதங்களுக்கு ஆட்சியில் இருக்கும் என இராணுவம் அறிவித்திருந்தது.
இதுகுறித்து ஆபிரிக்க ஒன்றியத்தின், அமைதி மற்றும் பாதுகாப்பு சபையின் கூடி ஆராய்ந்துள்ளது.
ஒன்றியத்தின் 15 பாதுகாப்பு சபை உறுப்பு நாடுகள் வியாழக்கிழமை நடத்திய கூட்டத்தின் பின்னர் இராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும், சிவில் அதிகாரிகளிடம் அதிகாரம் விரைவாக ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நடந்த சாட் ஜனாதிபதியின் இறுதிச் சடங்கிற்குப் பின்னர் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, சாட்டில் உறுதியான நிலைமை ஏற்படுத்த பிரான்ஸ் உதவும் என்று இறுதிச்சடங்கில் பங்கேற்ற பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் (Emmanuel Macron) தெரிவித்துள்ளார்