சிம்பாப்வே இராணுவ உலங்குவானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகி, வீடு ஒன்றின் மீது விழுந்துள்ளது.
தலைநகர் ஹராரேயில் இருந்து 30 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கிராமம் ஒன்றில் வெள்ளிக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றதாக சிம்பாப்வே வான்படை அறிவித்துள்ளது.
இந்த விபத்தில், வீட்டில் இருந்த குழந்தை ஒன்றும், மூன்று வான்படையினரும் உயிழந்திருப்பதாகவும், குழந்தையின் தாய் உள்ளிட்ட இரு பெண்கள் எரிகாயங்களுக்கு உள்ளாகினர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து, ஆராயப்பட்டு வருவதாகவும் சிம்பாப்வே வான்படை தெரிவித்துள்ளது,