கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 931 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 99ஆயிரத்து 613ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை வடக்கு தொடருந்து மார்க்கத்தில், குருநாகல் – கனேவத்தை தொடருந்து நிலையத்தில், இன்று நள்ளிரவு முதல் எந்தவொரு தொடருந்தும் நிறுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து கட்டுப்பாட்டு மையம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
கனேவத்தை தொடருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள 5 கிராமங்கள், கொரோனா பரவலினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.