சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இன்று மாலை வரை நாட்டில் 826 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து,517 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்தோடு நாட்டில், இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 94 ஆயிரத்து 155 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, தொற்றுக்குள்ளான 5 ஆயிரத்து 724 பேர் கொரோனாவுக்கான மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
18 வயது பெண் உட்பட 4 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 638 ஆக அதிகரித்தது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் இவர்களில் 403 ஆண்களும், 235 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது