கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்ததையடுத்து, ஜப்பானின் மத்திய அரசாங்கம் மூன்றாவது அவசரகால நிலையை அறிவித்துள்ளது.
இதன்படி, டோக்கியோ, ஒசாகா, கியோட்டோ மற்றும் ஹியோகோ மாகாணங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் ஜூலை மாதம் கோடைகால ஒலிம்பிக்கை நடத்த ஜப்பான் தயாராகி வருகின்றது.
ஜப்பான் ஏப்ரல் மாத இறுதியில் அதன் மிகப்பெரிய விடுமுறை காலத்திற்குள் நுழைவதற்கு சற்று முன்னதாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.