கொரோனா தொற்று காரணமாக டெல்லி மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்த 20 நோயாளிகள் ஒக்சிஜன் பற்றாக்குறையினால் மரணமடைந்துள்ளனர்.
நேற்றுஇரவு டெல்லி ரோஹினி பகுதியில் இருக்கும் ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் மருத்துவமனையின் தாங்கியில் ஒக்சிஜன் தீர்ந்து விட்டதாகவும், உருளைகளை ஏற்பாடு செய்து அவற்றை ஒக்சிஜன் குழாயில் இணைத்திருந்த போதும், போதிய அழுத்தத்தில் ஒக்சிஜன் கிடைக்காததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 20 நோயாளிகள் இறந்து விட்டதாக மருத்துவமனையின் இயக்குநர் தீப் பலுஜா தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மருத்துவமனையில் 6 பேர் ஒக்சிஜன் பற்றாக்குறையால் இறந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.