அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசியை 30வயதுக்கு அதிகமான எவரும் பெற்றுக்கொள்ள முடியும் என்று நோய்த்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு அறிவித்துள்ளது.
மாகாணங்கள் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகள் தமது வரையறுக்கப்பட்ட விநியோக நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் என்றும் நோய்த்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தற்போது மாகாணங்களில் 40வயதிற்கு மேற்பட்டவர்களுக்காக கொரோனா தடுப்பூசி விநியோகம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், மூன்றாவது அலைக்கு முகங்கொடுக்கும் வகையிலேயே நோய்த்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு தடுப்பூசியைப் பெறுபவர்களுக்கான வயதெல்லையை குறைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.