இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் சடுதியாக அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், ‘கோவிஷீல்ட், கோவேக்சின் தடுப்பூசிகளை 150 ரூபாக்கு கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.
தடுப்பூசிகளை இலவசமாக வழங்குமாறு மாநில அரசு விடுத்த கோரிக்கைக்கு அமையவே தற்போது இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது’ எனக் கூறப்பட்டுள்ளது.