வெளிநாடுகளில் இருந்து சிறிலங்கா திரும்புவோருக்கான தனிமைப்படுத்தல் காலம், மீண்டும் இரண்டு வாரங்களாக அதிகரிக்கப்படவுள்ளது.
சிறிலங்காவில் புதிதாக பரவி வரும் திரிபடைந்த கொரோனா தொற்றின் அறிகுறி, 7 தொடக்கம் 10 நாட்களிலேயே வெளிப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதனால், வெளிநாடுகளில் இருந்து திரும்புவோரை, ஏழு நாட்களின் பின்னர் வீடுகளுக்கு அனுப்ப முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தை 14 நாட்களாக அதிகரிப்பது குறித்த புதிய வழிகாட்டு முறை சுகாதார அமைச்சினால் விரைவில் வெளியிடப்படும் என்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.