தமிழகத்தில் கொரோனா தொற்று வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று 13 ஆயிரத்து 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 இலட்சத்து 51 ஆயிரத்து 487 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 78 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 395 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 3 ஆயிரத்து 842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 37 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.