தமிழகத்தில் 30 மணித்தியாலம் முழு ஊரடங்கு அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று இரவு 10 மணியில் இருந்து 30 மணித்தியாலம் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட இருக்கின்றது.
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ளமையினால் கடந்த 20ஆம் திகதி முதல், தினமும் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
அதற்கமைய இன்று இரவு 10 மணிக்கு ஆரம்பமாகும் ஊரடங்கு எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரை தொடர்ந்து அமுலில் இருக்கும்.
இதன்போது அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்றும் அதனை மீறி வெளியில் வருபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.