அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் மற்றும் அதற்கு வெளியே செயற்பட வேண்டிய விதம் குறித்து நினைவூட்டும் அறிவித்தலை சபாநாயகரின் ஆலோசனைக்கமைய வழங்கவுள்ளதாக படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
சபாநாயகரின் அறிவித்தலாக அடுத்த மாதம் முதல்வாரத்தில் ஆரம்பமாகவுள்ள சபை அமர்வுகளின்போது வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவித்தல் மும்மொழியிலும் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, சபை அமர்வுகளின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட வேண்டிய விதம் உள்ளிட்ட விடயங்கள் குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்படவுள்ளது