15 ஆண்டுகளுக்கு முன்னர் பதின்ம வயது மாணவர் ஒருவரை பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியதாக ரொறன்ரோ மருத்துவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
Lawrence Avenue மேற்கு பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்றில் 2006ஆம் ஆண்டு பெப்ரவரிமாதம் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அப்போது நோயாளிக்கு 17 வயதாக இருந்தது என்றும், அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக புதன்கிழமை கைது செய்யப்பட்ட 77 வயதுடைய மருத்துவர் மீது பாலியல் தாக்குதல், பாலியல் சுரண்டல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.