ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர், மியன்மார் இராணுவ பிரதானி ஜெனரல் மின் ஆங் ஹைங்(Min Aung Hong) தனது முதலாவது வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்கிறார்.
இந்தோனேசியாவில் இன்று இடம்பெறும், ஆசிய பிராந்திய உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.
இதன்போது, வெளிநாடுகளின் தலைவர்களை அவர் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில், வாக்காளர் மோசடி இடம்பெற்றதாக குற்றம் சுமத்தி, கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மியன்மார் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
இதன் பின்னர், இராணுவ ஆட்சிக்கு எதிராக மியன்மாரில் இடம்பெற்று வரும் போராட்டங்களில், இதுவரையில் 700 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். மியன்மாரின் இராணுவத்தின் செயற்பாடுகளுக்கு, உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது