தமிழகத்தில் மே 2 ம் நாள் காலை 8:00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கைக்கான மேசைகளை குறைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், ஒரு அறைக்கு 7 மேசைகள் என 14 மேசைகளில் வாக்கு எண்ணிக்கை இடம்பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
முகவர்களுக்கு 72 மணி நேரத்திற்கு முன் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்பதால், சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் எனவும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி குறிப்பிட்டுள்ளார். அனைத்து தொகுதிகளிலும் மே 2-ம் நாள் காலை 8:00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்படும், 8:00 மணிக்கு தபால் வாக்குகளும், 8:30 மணிக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும் என்றும், சத்யபிரதா சாஹூ மேலும் கூறியுள்ளார்