தமிழகம்- கேரளா மாநிலங்களுக்கு இடையில் இயக்கப்படுகின்ற பயணிகள் சிறப்பு தொடருந்து சேவை நாளை இரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன் பிரகாரம் ,16 பயணிகள் சிறப்பு தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.
விழுப்புரம்- மதுரை, திருச்சி- கரூர், எழும்பூர்- புதுச்சேரி, திருச்சி- காரைக்கால், ஆகிய பகுதிகளுக்கு இடையில் இயக்கப்படுகின்ற பயணிகள் சிறப்பு தொடருந்துகள், இரு மார்க்கமும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
குறித்த தொடருந்துகளில் முன்பதிவு செய்யாமல் இதுவரை காலமும் பயணம் மேற்கொள்ள கூடிய நிலைமை காணப்பட்டது.
இதேவேளை ஆழப்புழா- கொல்லம் எர்ணாகுளம்- ஆழப்புழா, ஆழப்புழா- எர்ணாகுளம், கொல்லம்- ஆழப்புழா, ஜோலார்பேட்டை-காட்பாடி, அரக்கோணம் காட்பாடி- ஜோலார்பேட்டை உள்ளிட்ட 16 தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.