கொரோனா தொற்று நெருக்கடி நிலையில் சரியான சுகாதார நடைமுறைகளைப் பேணாவிட்டால் வவுனியா சந்தைச் செயற்பாடுகளை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் நடத்தவேண்டிவரும் என மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றினைத் தடுப்பதற்கு முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல் வவுனியா மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அரச அதிபர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேவும், சந்தை வியாபாரிகள் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் எனவும் வெளிமாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவதால் சந்தைத் தொகுதியில் ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்