ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, நாடாளுமன்றத்தில் வைத்து தன்னை தாக்கியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸ குட்டிஆரச்சி வெலிக்கடை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலைமையின் போது, ஹரின் பெர்னாண்டோ தன்னை மோசமாக தூற்றி, நாடாளுமன்ற நுழைவாயிலில் தாக்கியதாக அவரது முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்றத்துக்குச் சென்ற வெலிக்கடை காவல் நிலைய பொறுப்பதிகாரி, திஸ்ஸ குட்டிஆரச்சியிடம் வாக்குமூலம் பதிவு செய்துகொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார். ஹரின் பெர்னாண்டோவுக்கு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது