கனடாவுக்கான அவசியமற்ற எல்லா பயணங்களையும் சமஷ்டி அரசாங்கம் மூட வேண்டும் என்று ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
B.1.617 கொரோனா தொற்று தீவிரமான பிரச்சினையை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளதை அடுத்தே, ஒன்ராறியோ முதல்வர் இந்த வேண்டுகோளை விடுத்திருக்கிறார்.
“இப்போது உலகின் ஏனைய பகுதிகளில் நாம் காணுகின்ற காட்சிகள் இதயத்தை நொருக்குவதாக உள்ளது.
புதிய வகையான கொடிய தொற்றுகள் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பேரழிவை ஏற்படுத்துகின்றன.
அதனை இங்கே நாங்கள் அனுமதிக்க முடியாது.” என்றும் முதல்வர் டக் போர்ட் குறிப்பிட்டுள்ளார்.