ஈராக் தலைநகர் பக்தாத்தில் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த வைத்தியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தால் பலர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் இருந்த பிராணவாயு கொள்கலனில் ஏற்பட்ட வெடிப்பால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த வைத்தியசாலையில் 120 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 90 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது