கொரோனா தடுப்பூசி செலுத்தும் வயது வரம்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி பெற்றுக்கொள்ள இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக ஒரு புதிய பிரசாரம் பிரித்தானியாவில் தொடங்கியுள்ளது.
அதன்படி 50 வயதிற்குட்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்துக்கொள்ள வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் வகையில் சமீபத்திய பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் மிக சமீபத்திய ஆய்வில் 94சதவீதம் முதியவர்கள் தடுப்பூசிகளைப் பற்றி சாதகமாக உணர்ந்தாலும், 16 முதல் 29 வயதுடையவர்களில் எட்டு பேரில் ஒருவர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது