கொரோனா தொற்று இருப்பதை மறைந்தது 22 பேருக்கு தொற்றை பரப்பிய சந்தேகத்தின் பேரில் ஸ்பெயினில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
40 வயதான அவர் இருமல் மற்றும் 40 செல்ஸியசிற்கும் அதிகமான உடல் வெப்பநிலை இருந்தபோதிலும் தொடர்ந்து வேலை மற்றும் உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்றதாகக் கூறப்படுகிறது.
அதன் பின்னர் பணிபுரியும் இடத்தில் ஐந்து பேருக்கும் மூன்று வயது குழந்தைகள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் 14 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
குறித்த நபர் பல நாட்களாக அறிகுறிகளை வெளிப்படுத்தியதாக ஸ்பெயினின் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.