கடந்த 99 நாட்களில் மாத்திரம் சுமார் 14 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி, இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிபரவியல் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 16 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட முதற்கட்ட தடுப்பூசி திட்டத்தில், 92.89 இலட்சம் பேருக்கு, முதல் மருந்தளவும் 59.94 இலட்சம் பேருக்கு, 2 ஆம் மருந்தளவும் போடப்பட்டுள்ளது.
மேலும் முன்கள ஊழியர்கள் 1.19 கோடி பேருக்கு, முதல் மருந்தளவும் 62.77 இலட்சம் பேருக்கு 2 ஆவது மருந்தளவும் போடப்பட்டுள்ளது.
இதன் மூலம், உலகத்திலேயே மிகவும் விரைவாக தடுப்பூசி திட்டத்தை செயற்படுத்திய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.