தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு இன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சடுதியாக அதிகரித்து வருகின்றமையினால் தமிழகத்தில் கடந்த 20ஆம் திகதி முதல் இரவு 10மணி முதல் காலை 4மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
மேலும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.