வவுனியா இரட்டைப் பெரியகுளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒன்பது வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில், சிறுமியின் தாயார் உட்பட இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த சிறுமி தனது தாயாருடன், சிதம்பரபுரம் மருத்துவமனைக்குச் சென்று விட்டு கல்குண்ணாமடுப் பகுதியில் உள்ள வீடு நோக்கி முச்சக்கர வண்டியில் திரும்பிக் கொண்டிருந்த போது, எதிரே வந்த உந்துருளி மோதியுள்ளது.
இதன்போது சிறுமி முச்சக்கர வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கல்குண்ணாமடுவைச் சேர்ந்த ஆகாசா ரஜினி என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.