யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் தந்தை, இராமநாதன், அரச அதிகாரி ஒருவரை பகிரங்கமாக அச்சுறுத்தியுள்ளார்.
15 பிரதேச செயலகங்களின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் பணிபுரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலரின் அழைப்பின் பேரில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
எனினும், இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் எவரும் கலந்து கொள்ளாத நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் தந்தை, அபிவிருத்தி உத்தியோகத்தர்களை எச்சரிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பதிவை, மறு பதிவு செய்திருந்த, ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் பதிவு ஒன்றின் கீழ் அவரை விமர்சிக்கும் பதிவு ஒன்றையும் இட்டிருந்த சங்கானை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தரை, நோக்கி அவர் பகிரங்கமாக எச்சரிக்கை செய்துள்ளார். இதனால் கூட்டத்தில் பங்கேற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அதிர்ச்சியடைந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன