அவசர தேவை கருதி ஸ்டெர்லைட்டின் ஒக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்கலாம் என்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தெரிவித்துள்ளன.
முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் இன்றையதினம் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவ்வாறு ஆலைகள் திறக்கப்பட்டால் அவை தொடர்பிலான பிரத்தியேக கண்காணிப்பு அவசியம் என்றும் அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
முன்னதாக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையில் ஒக்சிஜனை தயாரித்து தருவதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்தது.
இதற்காக அனுமதி பெற அந்த நிறுவனம் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளது. ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதனையடுத்து நீதிமன்றமும் ஆலையை மீளத்திறப்பதற்கு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.