கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், இந்தியாவுடனான எல்லையை மூடுவதாக பங்களாதேஷ் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் அப்துல் மோமன்,
‘‘இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் விரைவான அதிகரிப்பு காரணமாக இந்தியாவுடனான எல்லையை திங்கட்கிழமை முதல் 2 வாரங்களுக்கு மூடுகிறோம்.
அதே சமயம் இரு நாடுகளுக்கிடையில் சரக்கு வாகனங்கள் போக்குவரத்து அனுமதி வழங்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு கடந்த 14-ஆம் நாள் தொடக்கம் பங்களாதேஷ் அரசு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.