ஒன்ராறியோவில், முடக்கநிலைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கின்றன.
நேற்று முன்தினம், Lakeshore Boulevard மற்றும் Yonge/Dundas இல் இருந்து நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் குயின்ஸ் பார்க்கில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்ட போது, ஆத்திரமடைந்த ரொறன்ரோ வாசிகள் ஆங்காங்கே அவர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பின்னர், அவர்கள் Yonge Street, வழியாக காவல்துறையினரின் பாதுகாப்புடன், திரும்பிச் சென்ற போதும், வீதியில் நின்ற ஒருவருடன் முரண்பட்டுள்ளனர்.
ஒன்ராறியோவில் மே 20ஆம் நாள் வரை வீடுகளில் தங்கியிருக்கும் உத்தரவு நடைமுறையில் உள்ளதுடன், வீடுகளுக்கு வெளியே ஒன்று கூடுவோருக்கு 750 டொலர் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.