அமெரிக்கா- பால்டிமோரில் உள்ள உற்பத்தி கிடங்கில் இருந்து, ஒன்றரை மில்லியன் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளை இறக்குமதி செய்யவுள்ளதாக, கனடா சுகாதார துறை தெரிவித்துள்ளது.
இங்கு உற்பத்தியாகும் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளை பயன்படுத்துவதை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இடைநிறுத்தியது.
எனினும், இந்த தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்றும், தேவையான தர நிர்ணயங்களை கொண்டது என்றும் கனடா சுகாதாரத் துறை மீண்டும் உறுதி செய்துள்ளது.
இந்த நிலையிலேயே பால்டிமோரில் இருந்து உற்பத்தி செய்யப்படும் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு கனடா முடிவு செய்துள்ளது.