ஒன்ராரியோவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாக வைத்தியசாலையில் நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வைத்தியசாலைகளின் நெருக்கடிகளை சமாளிப்பதற்காக கனடிய படைக்குழுக்களின் மூன்று மருத்துவ குழுக்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை பொதுபாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர் (Bill Blair) தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வாறு அமைகக்ப்படும் குழுக்கள், பல்நோக்க மருத்துவ உதவிகளை வழங்கவுள்ளன. இதேவேளை, ஒன்ராறியோவின் சொலிசிட்டர் ஜெனரல் சில்வியா ஜோன்ஸின் (Sylvia Jones) கோரிக்கைக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதக குறிப்பிடப்பட்டுள்ளது.