சாட் நாட்டின் புதிய இடைக்கால பிரதமராக அல்பேர்ட் பாகிமி படகே (Albert Pahimi Padacké) நியமிக்கப்பட்டுள்ளார் என்று, நாட்டை ஆளும் இராணுவ சபை அறிவித்துள்ளது.
இடைக்காலப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள அல்பேர்ட் பாகிமி படகே, இந்த மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில், உயிரிழந்த ஜனாதிபதி இத்ரீஸ் டெபியிடம் தோல்வியடைந்திருந்தார்.
முன்னதாக, 2018ஆம் ஆண்டு அமைச்சரவை கலைக்கப்படும் வரை, இத்ரீஸ் டெபியின் அரசாங்கத்தில், இவர் பிரதமராகப் பணியாற்றியிருந்தார்.
எனினும், இவரது நியமனத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவரான யசின் அப்டெமானே (Yacine Abderamane) நிராகரித்துள்ளார்.
இவ்வாறான நியமனத்தை வழங்குவதற்கு இராணுவ சபைக்கு அதிகாரம் கிடையாது என்று அவர் கூறியுள்ளார்.
சாட் ஜனாதிபதி டெபி கிளர்ச்சியாளர்களுடன் நடந்த மோதலில் உயிரிழந்த பின்னர், அங்கு இராணுவ சபையே ஆட்சியை நடத்தும் என்று சாட் இராணுவம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.