சோமாலியாவில், எதிர்க்கட்சிக்கு ஆதரவான படைகள், தலைநகர் மொகடிசுவில் (Mogadishu) முக்கியமான பகுதிகளை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஞாயிற்றுக்கிழமை மொகடிசுவில் ஜனாதிபதி மொகமட் ஆப்துல்லாஹி பர்மாஜோவுக்கு (Mohamed Abdullahi Farmajo) ஆதரவான படைகளுடன் இடம்பெற்ற மோதல்களை அடுத்தே, இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் இருந்து அரை கிலோ மீற்றர் தொலைவில் உள்ள சந்தியும் இவ்வாறு கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.
வன்முறைகள் ஏற்பட்டுள்ளதை அடுத்து மொகடிசுவில் இருந்து பொதுமக்கள் அச்சத்தில் வெளியேறி வருகின்றனர்.
ஜனாதிபதி மொகமட் ஆப்துல்லாஹி பர்மாஜோ இரண்டு ஆண்டுகளுக்கு தமது பதவிக்காலத்தை நீடித்ததை அடுத்து சோமாலிய இராணுவத்தில் அவருக்கு ஆதரவான படையினரும், எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவான படையினரும், மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மோதல்களில், ஜனாதிபதி மாளிகைப் பகுதியில் மோட்டார்கள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.