தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,கொவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை தொடர்புகொண்டு உரையாற்றிய அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் (jack sulvin) இந்த தகவலை தெரிவித்தார். இந்தியாவுக்கு அனுப்புவதற்காக கொரோனா சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள், பரிசோதனை கிட், ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்துள்ளோம் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்