தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் புதிய கொரோனா தொற்று கொத்தணி உருவாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் பிரதான, மரக்கறிச் சந்தையான, தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில், கொரோனா தொற்று பரவ ஆரம்பித்துள்ளது.
இங்கு பணியாற்றும் 42 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, வர்த்தகர் சங்கத்தைச் சேர்ந்த எக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தை, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், மூன்று நாட்களுக்கு மூடுவதற்கு நேற்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், தொற்று நீக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தம்புள்ள சந்தைக்கு வரும் அனைவருக்கும் பிசிஆர் சோதனை நடத்தப்படவுள்ளதாகவும், வரும் வியாழக்கிழமையே சந்தையை மீளத் திறக்க அனுமதிக்கப்படும் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





