வீட்டில் முடங்கியிருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஐந்து நாட்களில் பாரிய எண்ணிக்கையிலான உள்ள ஒன்றுகூடல்களை தடுத்துள்ளதாக ரொரண்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 160வரையிலான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.
இதுதொடர்பில் ஒன்ராரியோ காவல்துறை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வார இறுதி நாட்களில் 210தொலைபேசி அழைப்புக்கள் கிடைக்கப்பெற்றதாகவும் அவை அனைத்தும் தொடர்மாடிக் குடியிருப்புக்கள் மற்றும் சில உள்ளக அரங்குகளில் ஒன்றுகூடல்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை அளிப்பவையாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், தொடர்ச்சியாக காவல்துறை தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.