முல்லைத்தீவு காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் 10 ஆர்.பி.ஜி குண்டுகளை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.
அரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது இந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு காவல்துறை பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்பு 5 ஆம் கண்டம் பகுதியில் உள்ள வனப்பிரதேசத்தில் இந்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
யுத்த காலத்தின் போது புதைத்து வைக்கப்பட்டவையாக இவை இருக்கலாம் என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
அந்த வெடி பொருட்கள் குறித்து மேலதிக விசாரணைகளை அவர்கள் மேற்கொண்டுள்ளனர் அத்தோடு, இந்த குண்டுகள் நீதிமன்ற அனுமதியுடன் அழிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது