தமிழகத்தில் மே முதலாம், 2ஆம் நாள்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருவதால், ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மே 2ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதால், அதற்கு முந்தைய நாளில் மக்கள், அரசியல் கட்சியினர் கூடுவதற்கு வாய்ப்புள்ளது.
இதனையடுத்து, அரசு விடுமுறை நாளான மே முதலாம் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 2 ஆகிய நாள்களில் முழு ஊரடங்கை அமுல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
மே 2ஆம் நாள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வருவோருக்கு மட்டும் விலக்கு அளிக்கவும் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. மக்கள் அதிகளவில் கூடினால் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டே, ஊரடங்கை பிறப்பிக்க நீதிமன்றம் பரிந்துரைப்பதாகவும், இதில் எந்தவித அரசியல் பின்புலமும் இல்லை என்றும் நீதிபதிகள் விளக்கமளித்துள்ளனர்