அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மற்றொருவருக்கு குருதி உறைந்த சம்பவம் ஒன்று ஒன்ராரியோவில் நிகழ்ந்துள்ளது.
70வயதான பிரஜை ஒருவருக்கே இவ்வாறான குருதி உறைவு ஏற்பட்டுள்ளதாக தலைமை வைத்திய அதிகாரி டேவிட் வில்லியம்ஸ் (David Williams) தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒன்ராரியோவில் இவ்வாறு குருதி உறைவுக்கு உள்ளான மூன்றாவது நபராகவும் அவர் காணப்படுவதாகவும் வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளர். தற்போது குறித்த நபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்