அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் 42 ஆயிரத்து 34 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 03 கோடியே 31 இலட்சத்து 46ஆயிரத்து 8 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 661 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05 இலட்சத்து 90 ஆயிரத்து 704 ஆக அதிகரித்துள்ளது