அரச நிறுவனங்களில் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுக்குமாறு, சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பொது நிர்வாக அமைச்சினால் இன்று சுற்றறிக்கை ஒன்று சம்பந்தப்பட்ட அரச பணியகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறைந்தளவு பணியாளர்களுடன், அத்தியாவசியமான பணிகளை மட்டும் அரச செயலகங்களில் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏனைய பணியாளர்களை வீடுகளில் இருந்து பணியாற்றுமாறும் பொது நிர்வாக அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
அத்துடன், கர்ப்பிணிகளான அரச பணியாளர்களை பணிக்கு அழைக்க வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.