கொரோனா தடுப்பூசிகளின் இரண்டு மருந்து அளவுகளைப் பெறும் எவருக்கும் அறிகுறியற்ற தொற்று பரவும் ஆபத்து மிகக் குறைவு என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் தெரசா டாம் தெரிவித்துள்ளார்.
‘ஃபைஸர்- பயோஎன்டெக், மொடர்னா, அல்லது ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசிகளின் இரண்டு அளவுகளைப் பெறும் எவருக்கும் அறிகுறியற்ற தொற்று பரவும் ஆபத்து மிகக் குறைவாக உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனாலும் தனிநபர்களின் நோய் எதிர்ப்பு தன்மைக்கு ஏற்ப இந்த நிலைமைகளில் மாற்றங்கள் அவ்வப்போது இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, இளவயதினர் மற்றும் சிரேஷ் வயதினர் இடையே இந்த நிலைமை மூன்றாவது அலையின்போது பல்வேறு நிலைமைகளில் வேறுபட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.