தமிழக சட்டசபையின் எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. அரசு 65 தொகுதிகளில் வெற்றிப்பெற்று சட்டமன்றத்தின் பிரதான எதிர்கட்சி அந்தஸ்த்தைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில் எதிர்கட்சி தலைவரை தெரிவு செய்வதில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கும் இடையில் போட்டி நிலவியது.
இதற்கிடையில் புதிய சட்டமன்றம் நாளை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்திற்கு முன் எதிர்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்ட நிலையில், மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது