ரொரண்டோ விமானநிலையத்திற்கு அருகில் உள்ள தனிமைப்படுத்தல் விடுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் ஐந்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கனடாவிற்கு வெளியில் பயணம் மேற்கொண்டு கட்டாய தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கட்டாய தனிமைப்படுத்தல் அமுலாக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறு கனடாவிற்கு வெளியிலிருந்து வருகை தருபவர்களில் கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 3ஆயிரத்து 279ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.