கனேடிய வான்படையின், CC-150 Polaris வானூர்தி, ஒரு தொகுதி மருத்துவ உதவிப் பொருட்களுடன் இந்தியாவைச் சென்றடைந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பயன்படுத்தப்படும், 25 ஆயிரம் குடுவை றெம்டிசிவிர் மாத்திரைகள் மற்றும் 50 செயற்கை சுவாசக் கருவிகள் இந்த வானூர்தியில் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
மேலதிக மருத்துவ உதவிப் பொருட்களுடன் கனேடிய வான்படையின் மற்றொரு வானூர்தி வரும் வாரம் இந்தியாவைச் சென்றடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.