சபாநாயகர் பதவிக்கு திமுகவின் சார்பில் ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், அப்பாவு போட்டியிடுவார் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
அத்துடன், தற்காலிக சபாநாயகரான பிச்சாண்டி, துணை சபாநாயகர் பதவிக்குப் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பிச்சாண்டி இன்று தற்காலிக சபாநாயகராக பதவி ஏற்றுள்ளார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நாளை கூடவுள்ள சட்டசபை கூட்டத்தொடரில், தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி, அனைத்து உறுப்பினர்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
இதன் பின்னர் நாளை சபாநாயகர் தேர்வு இடம்பெறவுள்ளது.