நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகின்ற நிலையில் செயற்கைச் சுவாச கருவிகள், ஒக்சிஜன் சிலிண்டர்கள், உள்ளிட்ட அத்தியாவசிய உயிர்காப்பு மருத்துவப் பொருட்களை வழங்குமாறு சிறிலங்கா அரசாங்கம் சீனாவிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தின் ஊடாக, சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஒக்சிஜன் சிலிண்டர்கள், ஒக்சிஜன் செறிவூட்டிகள், மற்றும் செயற்கை சுவாசக் கருவிகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை வழங்குமாறு சீனாவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இந்த வேண்டுகோளை விரைவாக நிறைவேற்றுவதற்கு, உயர் முன்னுரிமை அடிப்படையில், பணியாற்றிய வருவதாக, சீன தூதரகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.