ஊழியர் சேமலாப நிதியத்தின் சட்டத்தை திருத்தம் செய்வது தனியார்த்துறை பணியாளர்களுக்கு ஓய்வூதியத்தை வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
ஓய்வூதியம் பெற்றதன் பின்னர் மாதாந்தம் அதனை செலுத்துவது தொடர்பான நடைமுறையினை கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக நிதியமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எனினும், அது கலந்துரையாடல் மட்டத்தில் மாத்திரமே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதற்காக அரசாங்கத்தினால் ஒரு தொகை பணத்தையும் அதற்காக வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அதற்கான எந்தவொரு உடன்பாடும் இதுவரையில் எட்டப்படவில்லை என நிதியமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.