பாகிஸ்தான்,பங்களாதேஷ், நேபாளம் மற்றும் சிறிலங்கா ஆகிய நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கு தமது நாட்டுக்குள் நுழைய ஐக்கிய அரபு இராச்சியம் தற்காலிக தடை விதித்துள்ளது.
அத்துடன்,வெளிநாட்டு வானூர்திகளின் வருகைக்கும் எதிர்வரும் 12ஆம் திகதி நள்ளிரவு முதல் தற்காலிக தடை விதிக்கப்பட உள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வானூர்தி சேவை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.